அசாரின் முச்சசத்துடன் பலமான நிலையில் பாகிஸ்தான் அணி

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


அசாரின் முச்சசத்துடன் பலமான நிலையில் பாகிஸ்தான் அணி

பாகிஸ்தான் – மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது.

இதில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 579 ஓட்டங்கள் எடுத்திருந்த போது ’டிக்ளேர்’ செய்தது.

இதில் அசார் அலி முச்சதம் விளாசினார். அவர் 23 பவுண்டரி, 2 சிக்சர்கள் உட்பட 302 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதன் மூலம் முச்சதம் அடித்த 4வது பாகிஸ்தான் வீரர் என்ற பெருமை பெற்றார் அசார்.

முன்னதாக பாகிஸ்தானின் ஹனீப் (337), இன்சமாம் (329), யூனிஸ் கான் (313) ஆகியோர் முச்சதம் அடித்துள்ளனர்.

தவிர, சமி அஸ்லாம் (90 ஓட்டங்கள்), அஷாட் சபீக் (67 ஓட்டங்கள்), பாபர் அசாம் (69 ஓட்டங்கள்) ஆகியோர் அரைசதம் அடித்தனர்.

தற்போது மேற்கிந்திய தீவுகள் அணி தனது முதல் இன்னிங்சை ஆடி வருகிறது.