அடக்கம் செய்யப்பட்ட சிறுமியின் உடலைக் காணவில்லை; இரகசியமாக தோண்டியெடுப்பு

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


அடக்கம் செய்யப்பட்ட சிறுமியின் உடலைக் காணவில்லை; இரகசியமாக தோண்டியெடுப்பு

வாகன விபத்தொன்றில் உயிரிழந்த மதவாச்சி பகுதியிலுள்ள சிறுமி ஒருவரது சடலம், இனந்தெரியாத நபர்களால் இரவோடிரவாக தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுமியின் இறுதிக்கிரியைகள் நேற்று முன்தினம் நடைபெற்று, சடலம் அடக்கம் செய்யப்பட்ட நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மயானத்திலுள்ள கல்லறையில் இருந்து இரகசியமான முறையில் சிறுமியின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிறுமியின் தந்தை மதவாச்சி பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, சந்தேகநபரை தேடி பொலிஸார் வலைவிரித்துள்ளனர். அத்தோடு, மயானத்திற்கு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபரைத் தேடி மதவாச்சி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.