அடுத்ததாக உச்சம் தொடப்போகும் அரிசி விலை (Sri Lanka rice price)


அடுத்ததாக உச்சம் தொடப்போகும் அரிசி விலை (Sri Lanka rice price)

இலங்கையில் தமிழ் – சிங்கள புத்தாண்டுக்குள் ஒரு கிலோ அரிசியின் விலை (Sri Lanka rice price)  300 ரூபாவை விட அதிக விலைக்கு விற்பனை செய்யப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் ஒரு கிலோ அரிசிக்கு பதிலாக அரிசியின் சிறிய பக்கட்களையே மக்கள் கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என ஐக்கிய நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பசுமை விவசாயக் கொள்கையினால் மகா பருவத்தில் 50 வீதமான நெல் அறுவடை குறைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பெரும்போகத்தில் நெல் அறுவடை குறைந்தால் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும். ஒரு கிலோ அரிசி பக்கெட் இல்லாமல் சிறிய பக்கெட்டுகளில் கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.

தற்போது அனைத்து வகை அரிசியின் விலைகளும் (Sri Lanka rice price) அதிகரித்துள்ளன. ஒரு கிலோ நாடு 200 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகின்ற நிலையில், ஒரு கிலோ கீரி சம்பா 300 ரூபாயாக உயர்ந்துள்ளது.

அடுத்து வரும் வாரங்களில் அரிசியின் விலை மேலும் அதிகரிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சந்தையில் அரிசி விலை யில் (Sri Lanka rice price) ஏற்பட்டுள்ள மாற்றம்

Rice price in Sri Lanka; உச்சம் தொடும் இலங்கை அரிசி விலை; அடுத்த சில தினங்களில் ஏற்படப்போகும் மாற்றம்