அடுத்த மூன்று மாத காலம் மக்கள் எதிர்நோக்கவுள்ள மிகப்பெரிய சவால்


அடுத்த மூன்று மாத காலம் மக்கள் எதிர்நோக்கவுள்ள மிகப்பெரிய சவால்

மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு காரணமாக எதிர்வரும் 3 மாத காலம் மிகவும் சவாலான காலமாக இருக்கும் என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த அந்த சங்கத்தினர், பல வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சைகளை மாத்திரம் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டனர்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த இலங்கை மருத்துவ சங்கத்தின் செயலாளர் விசேட வைத்தியர் இஷான் டி சொய்சா, சத்திர சிகிச்சைகளுக்கு முன்னர் வழங்கப்படும் சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இதன் காரணமாக பல வைத்தியசாலைகளில் அவசர சத்திர சிகிச்சைகளை மாத்திரம் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நோயாளி ஒருவரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு முன்னர் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவுவதாகவும் இலங்கை மருத்துவ சங்கத்தின் செயலாளர் விசேட வைத்தியர் இஷான் டி சொய்சா தெரிவித்துள்ளார்.