பண்டாரகம – அட்டுலுகம பகுதியில் 9 வயதான சிறுமி ஆயிஷா கொலை செய்யப்பட்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திதுள்ளது.
கொலையுடன் தொடர்புடையவரான 29 வயதான குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.
இந்நிலையில் சந்தேகநபர் வழங்கியுள்ள வாக்குமூலம் வருமாறு,
கடந்த 27ம் தேதி ஆயிஷா கையில் பார்சல் ஒன்றை எடுத்து வருவதை பார்த்தேன். நான் அப்போது ஐஸ் போதை பொருளை பாவித்து இருந்தேன் .
அவள் வீடு திரும்புவதற்கு முன்னரே, வீட்டுக்குச் செல்லும் வழியில் ஓடி மறைந்திருந்தேன். கோழி இறைச்சியை வாங்கிக்கொண்டு வந்துகொண்டிருந்த போது அலாக்காக தூக்கிச்சென்று, உடல் முழுவதும் ஸ்பரிசம் செய்தேன்இ.
முரண்டுபிடித்தாள் அதனால், சகதியில் அமிழ்த்தினேன் என அட்டுலுகம சிறுமி பாத்திமா ஆயிஷாவின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டவர் வாக்குமூலமளித்துள்ளார்.
எனது இச்சையை தீர்த்துக்கொள்ளவே தூக்கிச்சென்றேன். எனினும், முரண்டுபிடித்தால், வன்புணர்வதற்கு எடுத்த முயற்சி கைகூடவில்லை. முகத்தில் துணியொன்றினால் மூடி, தூக்கிச்சென்றேன்.
ஸ்பரிசம் செய்தேன். இதனை யாரிடமாவது சொல்லிவிடுவாளோ என்ற பயத்தில், சதுப்பு நில சேற்றில் முகத்தை அமிழ்த்தி சிறுமியின் உடலின் முதுகுப்பகுதியில் தன் முழங்காலினால் ஊன்றி உயிர்போகும் வரையிலும் அமிழ்த்திகொண்டிருந்தேன்
சிறுமி பாத்திமா ஆயிஷாவின் படுகொலைத் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரான ‘பல்லி குட்டி’ என்றழைக்கப்படும் சிறுமியின் தாய் வழி உறவுக்காரரான மூன்று பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு வாக்குமூலமளித்துள்ளார்.
இவர் 08, 05 மற்றும் 03 வயதுடைய மூன்று பெண் பிள்ளைகளின் தந்தையும் ஆவார்.
28 வயதான அவர், அங்குள்ள ஹோட்டலில் கொத்து ரொட்டி தயாரிக்கும் கொத்துபாஸ், ஐஸ் எனும் போதைப்பொருளுக்கும் அடிமையானவர்.
சிறுமியின் ஜனாஸா, இன, மத, மொழி, பேதங்களை கடந்து, ஆயிரக்கணக்கானோரின் கண்ணீருக்கு மத்தியில் நேற்றிரவு (30) நல்லடக்கம் செய்யப்பட்டது.
சிறுமியின் மரணத்துக்கு வாய்,மூக்கு வழியே சேற்றுடன் கலந்த நீர் உட்சென்று நுரையீரல் மற்றும் உடல் உள்ளுறுப்புக்களில் கலந்தமை பிரதான காரணம் என சட்ட வைத்திய அதிகாரிகள் குழாம் தீர்மானித்துள்ளது.
பிரதான சந்தேக நபரை 48 மணிநேர தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுக்க பாணந்துறை நீதிவான் நீதிமன்றம் நேற்று (30) அனுமதியளித்திருந்தது.
தனது வீட்டிலிருந்து கோழி இறைச்சி கொள்வனவு செய்வதற்காக சுமார் 200 மீற்றர் தூரத்திலுள்ள இறைச்சி கடைக்கு கடந்த 27ஆம் திகதி சென்றிருந்த போது பாத்திமா ஆய்ஷா எனும் சிறுமி காணாமல் போயிருந்தார்.
24 மணிநேரத்தை கடந்த நிலையில் கடந்த 28 ஆம் திகதி மாலை வேளையில் சதுப்பு நில பகுதியில் இருந்து சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.
பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. சிறுமி கொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் இடத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடந்துகொண்ட சிறுமியின் உறவினர் ஒருவர் தொடர்பில் களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் அவதானம் செலுத்தி அவரை கைது செய்து மேற்கொண்ட விசாரணைகளின் போதே மேற்கண்ட விவரம் அம்பலமானது.
அட்டுலுகம சிறுமி ஆயிஷா கொலை – பிரேத பரிசோதனையில் வௌியான அதிர்ச்சி தகவல்
சிறுமி ஆயிஷா படுகொலை; இன்று வௌியான முக்கிய தகவல்கள்
இந்நிலையில் கொலை செய்யப்பட்ட சிறுமி பாத்திமா ஆயிஷாவின் தாயார் ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்டுள்ளார்.
அன்றைய தினம் வெள்ளிக்கிழமை என்பதனால் மகள் கோழி இறைச்சி கறி கேட்டார். அவருக்கு கோழி இறைச்சி சாப்பிடுவதற்கு மிகவும் விருப்பம். நான் வாங்கி வருகிறேன் என கூறி 250 ரூபாய் பணத்தையும் ஆயிஷா பெற்றுக் கொண்டார்.
அருகிலுள்ள கடைக்கு சென்று வருமாறு கூறினேன். அங்கு 3 முறை சென்று வந்தார். எனினும் அங்கு கோழி இறைச்சி இல்லாமையினால் சற்று தொலைவில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். அங்கு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.
இதற்கு முன்னரும் அந்தக் கடைக்கு தனியாக சென்று வருவார். மிகவும் தைரியமானவர். கடைக்கு சென்றவர் காலை 11 மணி வரை வீட்டுக்கு வராமையினால் குடும்பத்தினருக்கு தொலைபேசி ஊடாக தகவல் வழங்கினேன். இது தொடர்பில் கணவருக்கும் கூறினேன். அவருமே தேடி பார்த்தார் கண்டுபிடிக்கவில்லை.
ஒரு மணித்தியாலத்திற்கு மேல் தேடிய பின்னர் பொலிஸாரிடம் கூறினோம். அதன் பின்னர் மேற்கொண்ட தேடலின் போது மகளின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
உயிரிழந்த மகள் மூன்றாவது பிள்ளை. அவர் தனது கடைசி சகோதரி மீது மிகவும் அன்பு கொண்டுள்ளார்.
அடுத்த வருடம் மகள் 6ஆம் வகுப்பிற்கு செல்வதற்காக புத்தகங்கள் அனைத்தும் ஏற்பாடு செய்திருந்தார்.
அவரே அனைத்தையும் ஏற்பாடு செய்துக் கொண்டிருந்தார். இனி அவர் ஒரு போதும் மீண்டும் வர மாட்டார் என தாயார் தெரிவித்துள்ளார்.