அட்டுலுகம சிறுமி ஆயிஷா கொலை – பிரேத பரிசோதனையில் வௌியான அதிர்ச்சி தகவல்


அட்டுலுகம சிறுமி ஆயிஷா கொலை – பிரேத பரிசோதனையில் வௌியான அதிர்ச்சி தகவல்

பண்டாரகமை – அட்டுலுகம சிறுமி பாத்திமா ஆயிஷா நீரில் மூழ்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், கறித்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படவில்லை எனவும் சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அட்டுலுகம சிறுமி பாத்திமா ஆயிஷா கொலை தொடர்பில் கைதான 29 வயதான நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

தாமே குறித்த சிறுமியை கொலை செய்ததாக தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கைதான 29 வயதான 3 பிள்ளைகளின் தந்தை வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் பாணந்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போது சந்தேநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 27ஆம் திகதி காணாமல் போயிருந்த சிறுமி பாத்திமா ஆயிஷா அக்ரம், மறுநாள் தமது வீட்டுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலம் ஒன்றில் வைத்து சடலமாக மீட்கப்பட்டிரந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறுமி காணாமல் போனதையடுத்து கிராமம் முழுவதும் சிறுமியைத் தேடியபோது, ​​குறித்த நபரும் சிறுமியைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான சிசிரிவி காட்சிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதேவேளை பாத்திமா ஆயிஷா படுகொலை தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 29 வயதான நபரை, இரண்டு நாட்கள் தடுத்துவைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

அட்டுலுகம சிறுமி ஆயிஷா கொலை; இருவர் கைது; ஒருவரின் வீட்டு கட்டிலுக்கு அடியில் சேரு படிந்த சாரம்

அட்டுலுகம சிறுமி ஆயிஷா படுகொலை; இன்று வௌியான முக்கிய தகவல்கள்