அதிசிறந்த முதல் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலில் சிறிநேசன் மற்றும் திலகராஜா

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


அதிசிறந்த முதல் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலில் சிறிநேசன் மற்றும் திலகராஜா

இலங்கை நாடாளுமன்றில் சிறப்பாக செயற்பட்ட உறுப்பினர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் சிறப்பாக செயற்பட்ட பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அந்தப் பட்டியலின் அடிப்படையில் முதன்மையானவராக நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க உள்ளார்.

அடுத்து வரும் ஒன்பது இடங்களில், நாடாளுமன்ற உறுப்பினர்களான புத்திக்க பத்திரன, அனுர குமார திஸாநாயக்க, சுனில் ஹெட்டியாராச்சி, தலதா அத்துக்கோரல, திலகராஜா மயில்வாகனம், நலிந்த ஜயதிஸ்ஸ, ரவி கருணாநாயக்க, ஞானமுத்து சிறிநேசன் மற்றும் விஜேபால ஹெட்டியாராச்சி ஆகியோர் உள்ளனர்.

இவர்களில் இருவர் தமிழ் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.