சமையல் எரிவாயு, சிலிண்டர் வால்வுகள், ரெகுலேட்டர்கள் மற்றும் குழாய் ஆகியவற்றின் தர நிர்ணயங்களுக்கு (SLSI) அதிகாரம் அளிக்கும் வகையில் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது.
இலங்கையில் கடந்த ஒரு மாத காலமாக எரிவாயு கொள்கலன்களில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவங்களை அடுத்து நீதிமன்றத்தில் எரிவாயு நிறுவனங்கள் இணங்கிக்கொண்டமைக்கு அமையவே இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானிக்கு நிதியமைச்சர் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.