எரிபொருள் விலை அதிகரிப்பு செய்யப்பட்டதால் அதற்கு அமைய பேருந்து போக்குவரத்து கட்டணம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கான கட்டணங்களில் திருத்தத்தை ஏற்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு பிரச்சினை ஏற்படாத வகையில் கட்டணங்களை அதிகரிக்குமாறு போக்குவரத்து துறையினரிடம் கோரிக்கை விடுப்பதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்ட விலை சூத்திரத்திற்கு அமைவாகவே எரிபொருள் விலை அதிகரிப்பு அமுலாக்கப்பட்டுள்ளதென, வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
குறித்த விலை சூத்திரத்தில் இறக்குமதி, தரையிறக்கம் மற்றும் விநியோக செலவுகள் என்பன உள்ளடக்கப்பட்ட போதிலும் இலாபம் சேர்க்கப்படவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.