பாடசாலை மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்களை வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் 2023 ஆம் கல்வியாண்டுக்கான பாடப்புத்தகங்களை வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று (15) ஹோமாகம பிடிபனவிற்கு அருகில் அமைந்துள்ள கல்வி வெளியீடுகள் திணைக்கள களஞ்சிய வளாகத்தில் இடம்பெற்றது.
கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைவர் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலைக் கல்வியாண்டு மார்ச் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு முன்னர் அனைத்து அத்தியாவசியப் பாடப்புத்தகங்களின் விநியோகத்தையும் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
அதன்படி, 6-11 தரம் வரையிலான பாடங்கள் தொடர்பான அத்தியாவசிய பாடப்புத்தகங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதன் மூலம் பாடப்புத்தகங்களின் தேவை பூர்த்தி செய்யப்படும் என சுசின் பிரேம்ஜயந்த சுட்டிக்காட்டியுள்ளார்.
வருடத்திற்கு சராசரியாக 4.5 பில்லியன் ரூபாய் பாடநூல்களை அச்சிடுவதற்கு செலவிடப்படுகின்ற போதிலும் 350 இற்கும் அதிகமான பாடப்புத்தகங்களை மும்மொழி ஊடகங்களில் அச்சிடுவதற்கு அரசாங்கம் 16 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான செலவை ஏற்றுக்கொள்ள நேர்ந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அது கடந்த வருடங்களை விட நான்கு மடங்கு அதிகரிப்பாகும்.
இம்முறை, அரச அச்சக கூட்டுத்தாபனம், இந்தியக் கடன் உதவியின் அடிப்படையில் மூலப்பொருட்களை பெற்றுக் கொண்டதன் ஊடாக பாடப்புத்தகத் தேவையில் 45% தை பூர்த்தி செய்யும், மீதமுள்ள 55% வீத நூல்கள் 22 தனியார் அச்சகங்களால் அச்சிடப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.