அன்று பொருளாதார கொலைகாரராக மஹிந்த!

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


அன்று பொருளாதார கொலைகாரராக மஹிந்த!

இன்று கூக்குரலிடும் கூட்டு எதிர்கட்சியினர் அன்று மஹிந்த ராஜபக்ஷவை பொருளாதார கொலைக்காரன் என தெரிவித்ததாக மேல்மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் கொலையுடன் எல்லோரும் மஹிந்தவை பார்த்து நகைக்க தொடங்கிவிட்டனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தலில் தோல்வியடைந்தமைக்கு அவர்களது குடும்ப அங்கத்தவர்களது நடவடிக்கையே காரணம்.

தாங்கள் அன்று வாக்களித்தது வெற்றிலைக்கு தான். இன்று சத்திமிடுபவர்கள் அன்று மஹிந்தவிற்கு வாக்களிக்கவில்லை.

மஹிந்த ராஜபக்ஷவின் புதிய கட்சி தொடர்பில் எங்கும் சொல்லப்படவில்லை. கிருலப்பனையில் போலவே சமனல விளையாட்டரங்கில் கூடிய கட்சி ஆதரவாளர்களைக் கொண்டு அடுத்த தேர்தலை சந்திக்க தயாராக இருக்கின்றோம்.

இதேவேளை மத்திய வங்கி ஆளுநர் தொடர்பில் கருத்து தெரிவித்த இவர் எதிர்வரும் 30ஆம் திகதி கண்டிப்பாக அர்ஜுன் மகேந்திரனை வீட்டுக்கு அனுப்புவதே கட்சியின் உறுதிப்பாடு என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.