அப்துல்லா மஹ்ரூபின் மகன் போதைப் பொருளுடன் கைது


அப்துல்லா மஹ்ரூபின் மகன் போதைப் பொருளுடன் கைது

முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்பின் மூத்த புதல்வர் போதைப்பொருடன் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கிண்ணியா அஹமட் ஒழுங்கை பகுதியில் வைத்து அவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அவரிடமிருந்து 150 மில்லிகிராம் ஹெரோயின், 170 மில்லிகிராம் ஹசிஸ் போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபரை திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.