அப்ரிடியின் தலைவர் பதவி பறிபோகும் நிலை

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


அப்ரிடியின் தலைவர் பதவி பறிபோகும் நிலை

இருபதுக்கு 20 உலகக்கிண்ண போட்டிகளின் பின்னர் அணியின் தலைவர் பதவியில் இருந்து ஷஹித் அப்ரிடி விலக வேண்டும் என்றும் அவ்வாறில்லாவிட்டால் அவர் நீக்கப்ப்டுவார் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஷகாரியார் கான் கூறியுள்ளார்.

இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷகாரியார் கான் கூறுகையில், டி20 உலகக்கிண்ணத்தோடு தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்பதை அப்ரிடி புரிந்துக்கொண்டுள்ளார்.

அவர் பதவி விலகாத பட்சத்தில் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுவார். மேலும், அவர் ஒரு வீரராக மட்டும் அணியில் நீடிக்க விரும்பினால், அவரை தேர்வு செய்வதா வேண்டாமா என்பது பற்றி பிறகு முடிவு செய்யப்படும்.

அதேபோல் பயிற்சியாளரை பொருத்தவரை ஒரு வெளிநாட்டவரை புதிய பயிற்சியாளராக நியமிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.