அமெரிக்காவிலும் 100 நாள் வேலைத்திட்டம்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


அமெரிக்காவிலும் 100 நாள் வேலைத்திட்டம்

அமெரிக்க குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க மக்களுக்கு 100 நாள் வேலைத் திட்டமொன்றை அறிமுகம் செய்துள்ளார்.

தான் அமெரிக்க ஜனாதிபதியானால், அடுத்துவரும் 100 நாட்களில் நாட்டில் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ள நடவடிக்கைகள் குறித்து அவர் நேற்று விசேட உரையொன்றை ஆற்றியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் 17 நாட்களே எஞ்சியுள்ளது. அமெரிக்காவில் வாழும் மக்களுக்கு வாழ் நாளில் ஒரு தடவை மாத்திரமே காண முடியுமான மாற்றங்களை செய்யப் போவதாகவும் அவர் தனதுரையில் நேற்று (22) கூறியுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 100 நாள் வேலைத்திட்டத்தை தேர்தல் விஞ்ஞாபனமாக முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது