அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் இலங்கை வாருகிறார்.

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் இலங்கை வாருகிறார்.

மெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் இந்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

பிஸ்வால், இலங்கை மற்றும் பங்களதேஷிற்கு பயணங்களை மேற்கொள்ள உள்ளதாக அமெரிக்க மாநிலத்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த பயணத்தில், தெற்காசியாவின் பிரதி உதவி செயலாளர் மென்பிரிட் சிங்கும் கலந்து கொள்ளவுள்ளார்.

இரு தரப்பு பொருளாதார ஒத்துழைப்பு, ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கம் குறித்து சிரேஸ்ட அரச அதிகாரிகள், அரசியல் தலைவர்களுடன் நிஷா பிஸ்வால் கலந்துரையாடல்களை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளும் ஐந்தாவது பயணம் இதுவாகும்.