அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவது யார்? வெளியான புதிய கருத்துக்கணிப்பு!

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவது யார்? வெளியான புதிய கருத்துக்கணிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன் அதிக புள்ளிகள் பெற்று முன்னணியில் உள்ளதாக புதிய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.

உலகமே எதிர்ப்பார்த்திருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 8-ம் திகதி நடைபெறுகிறது.

அமெரிக்க வரலாற்றில் இதுவரை ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களே ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இம்முறையும், ஜனநாயக கட்சியை சேர்ந்த முன்னாள் வெளியுறவு துறை அமைச்சரான ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சியை சேர்ந்த தொழிலதிபரான டொனால்ட் டிரம்பும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இருவரில் தற்போது யார் முன்னிலை வகித்து வருகிறார்கள் என பொதுமக்களிடம் கருத்துக்கணிப்பு ஒன்று நடத்தப்பட்டது.

நேற்று வெளியான அந்த கருத்துக்கணிப்பில், டொனால்ட் டிரம்பை விட ஹிலாரி கிளிண்டன் அதிக புள்ளிகள் பெற்று முன்னணியில் உள்ளார்.

குறிப்பாக, Pennsylvania மாகாணத்தில் 11 புள்ளிகளும், Michigan மாகாணத்தில் 9 புள்ளிகளும் New Hampshire மாகாணத்தில் 15 புள்ளிகளும் டொனால்ட் டிரம்பை விட கூடுதலாக ஹிலாரி கிளிண்டன் பெற்றுள்ளார்.

நாடு முழுவதும் டொனால்ட் டிரம்பை விட ஹிலாரி கிளிண்டன் 10 புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளதால் ஹிலாரி ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற கூடுதல் வாய்ப்புள்ளது தெரியவந்துள்ளது.

இந்த தேர்தலில் ஹிலாரி வெற்றி பெற்றால், அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் ஜனாதிபதி என்ற புகழும் ஹிலாரிக்கும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.