அமெரிக்க விமானப்படையின் தாக்குதலில் ஐ.எஸ் மூத்த தலைவர் பலி

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


அமெரிக்க விமானப்படையின் தாக்குதலில் ஐ.எஸ் மூத்த தலைவர் பலி

சிரியா மற்றும் ஈராக்கில், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக, அமெரிக்கா, ரஷியா, சிரியா ஆகிய நாடுகளின் படைகள் சண்டையிட்டு வருகின்றன.

இந்நிலையில், சிரியாவில் அமெரிக்கா நடத்திய வான் தாக்குதலில், ஐ.எஸ். இயக்க மூத்த தலைவர் அப்த் அர்-ரகுமான் முஸ்தபா ல்-கதுலி பலியானார்.

அவர் அந்த இயக்கத்தில் இரண்டாம் இடத்தில் இருந்து வந்தவர் ஆவார். அவர் சில நாட்களுக்கு முன்பே கொல்லப்பட்ட போதிலும், நேற்றுதான் இத்தகவல் வெளியிடப்பட்டது.

இந்த தகவலை அமெரிக்க ராணுவ தலைமையமான ‘பென்டகன்’ தலைவர் அஷ்டன் கார்ட்டர் நேற்று உறுதிப்படுத்தினார்.

அவர் மேலும் கூறுகையில், ‘அல்-கதுலி, ஐ.எஸ். இயக்கத்தின் நிதி மந்திரி ஆவார். அவரது மரணத்தால், சிரியா மற்றும் ஈராக்குக்கு உள்ளேயும், வெளியேயும் ஐ.எஸ். இயக்கத்தின் செயல்படும் திறன் பாதிக்கப்படும்’ என்றார்.

இதற்கிடையே, சிரியாவில் நடந்து வரும் சண்டையில், பால்மைரா நகரில் உள்ள பழமையான கோட்டையை ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து சிரியா ராணுவம் நேற்று மீட்டது.

இந்த கோட்டை, ‘யுனெஸ்கோ’வால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது ஆகும். அது, 13-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.