அமைச்சுப் பதவி பெற்றபின் ஹரின் பெர்னாண்டோ வௌியிட்ட முக்கிய அறிவிப்பு


அமைச்சுப் பதவி பெற்றபின் ஹரின் பெர்னாண்டோ வௌியிட்ட முக்கிய அறிவிப்பு

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டே அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றுக்கொண்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த ஹரீன், ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து தான் ஒருபோதும் விலகப் போவதில்லை எனவும், தன்மீது ஒழுக்காற்று நடவடிக்கையை கட்சி மேற்கொள்ளுமானால் அதற்கு முகங்கொடுக்க தான் தயார் எனவும் குறிப்பிட்டார்.

கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து ஒரு சதவீதம் கூட தான் பின்வாங்கவில்லை என தெரிவித்த ஹரீன் பெர்ணான்டோ, தானும் ரணிலும் ஒரே படகில் தற்போது இருந்தாலும் புயலில் சிக்கியுள்ள கப்பலை கரைக்கு கொண்டுவருவதே தமது நோக்கம் என தெரிவித்தார்.

மேலும், ரணில் விக்ரமசிங்கவுடன் அரசியலில் ஒன்றிணைந்து பயணிப்பதற்காக இந்த பதவியை ஏற்கவில்லை எனவும், நாட்டின் நிலைமையை கருத்திற்கொண்டே இதை பொறுப்பேற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்காரவுக்கு எதிராக நடவடிக்கை