அரசாங்கத்திற்கு எதிர்ப்பை வெளியிட்ட நாடகக் கலைஞர்கள்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


அரசாங்கத்திற்கு எதிர்ப்பை வெளியிட்ட நாடகக் கலைஞர்கள்

இலங்கையின் நாடகக் கலைஞர்கள் அரசாங்கத்திற்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

மேல் மாகாண கலாச்சார கேந்திர நிலையத்தில் நேற்றைய தினம் அரச நாடக விழா நடைபெற்றது.

அரசாங்க நாடக விழாவிற்கு இம்முறை அரசாங்கம் அனுசரணை வழங்கவில்லை என கலைஞர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இம்முறை அரச நாடக விழாவினை நாடத்த அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்யாத காரணத்தினால் நாடக விழாவினை நடாத்த கால தாமதம் ஏற்பட்டதாக நாடகக் கலை இணைச் சபையின் தலைவர் பேராசிரியர் சந்திரகுப்த தேநுவர தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் நடைபெற்ற நாடக விழாவில் பங்கேற்று அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று மாலை 4.00 மணிக்கு கல்வி அமைச்சர் அகில விராஜ் தலைமையில் நிகழ்வு நடத்தப்படவிருந்தது.எனினும் கல்வி அமைச்சர் நிகழ்வில் பங்கேற்கவில்லை. இதனால் 5.00 மணிக்கு நிகழ்வு நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்த கலைஞர்கள் நூதனமான முறையில் தங்களது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

சிலர் கறுப்பு ஆடைகளை அணிந்து எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.மேலும் சிலர் விருதுகள் வழங்கப்படும் போது பதாகைகளை ஏந்தி அதன் ஊடாக எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

நீங்கள் அப்படி என்றால் நாங்களும் இப்படித்தான் அதுவா உங்கள் எண்ணம்”

“ஜனாதிபதி அவர்களே கலை வாழ்க்கை என்று ஒன்றும் உள்ளது என்பது தெரியுமா”

“கல்வி அமைச்சரே நாடகம் தேவைப்படாதா”

“அரசாங்கம் இவ்வளவு பீச்சானா மச்சான்”

“குறைநிரப்புப் பிரேரணையில் கலைத்துறைக்கு 0.3 வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது, இது அதிகாரிகளுக்கு உண்ண போதுமானதல்ல”

“பிரதமர் அவர்களே கலையை சாப்பிட முடியுமா? அப்படித்தானே”

என பல்வேறு பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சி பீடம் ஏற்றும் முயற்சியில் ஈடுபட்ட நாடகக் கலைஞர்களும் இந்த எதிர்ப்பில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.