அரச ஊழியர்களின் சம்பளம் குறைப்பு? வௌியாகியுள்ள தகவல்


அரச ஊழியர்களின் சம்பளம் குறைப்பு? வௌியாகியுள்ள தகவல்

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அரச ஊழியர்கள் அலுவலகங்களுக்கு வந்து பணிபுரிவதை மட்டுப்படுத்தல் மற்றும் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வது என்பது தொடர்பில் தகவலொன்று வெளியாகியுள்ளது.

நாட்டில் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை காரணமாக அரசாங்க செலவினங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கும் வகையில் அரச ஊழியர்களை அலுவலகங்களுக்கு அழைப்பதனை கட்டுப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வீட்டில் இருந்து வேலை செய்பவர்களின் சம்பளம் குறைக்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ரத்னசிறி கொழும்பு ஊடகம் ஒன்றிடம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

தற்போது அரச உத்தியோகத்தர்களை அலுவலகங்களுக்கு அழைப்பதை கட்டுப்படுத்த முன்வருபவர்கள் அவ்வாறான சம்பளக் குறைப்புக்கு இணங்கினால் சுற்றறிக்கை ஒன்றை வெளியிடத் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பணம் செலவழித்து பணிக்கு வருபவர்களுக்கும், செலவின்றி வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்கும் ஒரே மாதிரியான சம்பளம் வழங்குவது நியாயமற்றது என்றும் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் அரச ஊழியர்கள் முன்வைத்துள்ள கோரிக்கை

அரச ஊழியர்கள் பணிக்கு திரும்புவது தொடர்பான அறிவிப்பு