சந்தையில் அரிசி விலை யில் ஏற்பட்டுள்ள மாற்றம்


சந்தையில் அரிசி விலை யில் ஏற்பட்டுள்ள மாற்றம்

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இந்த வாரம் அரிசி விலை, (Rice price in Sri Lanka) குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரிசி விநியோகம் வீழ்ச்சியடைந்துள்ளமையே இதற்குக் காரணமாகும் என ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, அனைத்து வகையான உள்ளூர் அரிசி வகைகளின் விலைகளும், 3 ரூபா முதல் 13 ரூபாவுக்கு இடைப்பட்ட அளவில் அதிகரித்துள்ளன.

அத்துடன், இறக்குமதி செய்யப்படும் அரிசி வகைகளின் விலைகள், 9 ரூபா முதல் 18 ரூபாவுக்கு இடைப்பட்ட அளவில் அதிகரித்துள்ளன.

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமையால், இந்த அரிசி விலை அதிகரிப்பு (Rice price in Sri Lanka) ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரிசி விலை மீண்டும் உயர்வு

Rice price in Sri Lanka; உச்சம் தொடும் இலங்கை அரிசி விலை; அடுத்த சில தினங்களில் ஏற்படப்போகும் மாற்றம்