அர்ஜுன் மகேந்திரனின் நியமனத்தை ஆரம்பம் முதலே எதிர்த்தேன்! அமைச்சர் ராஜித தகவல்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


அர்ஜுன் மகேந்திரனின் நியமனத்தை ஆரம்பம் முதலே எதிர்த்தேன்! அமைச்சர் ராஜித தகவல்

மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன் மகேந்திரனின் நியமனத்தை ஆரம்பம் முதலே தான் தீவிரமாக எதிர்த்து வந்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையின் வாராந்த முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் ராஜித சேனாரத்ன மேற்கண்ட தகவலை வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், கடந்த 2002ம் ஆண்டு ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்தின் பதவிக்காலத்தில் இருந்தே எனக்கு அர்ஜுன் மகேந்திரனைத் தெரியும்.

அதன் காரணமாகவே அவர் மத்திய வங்கியின் ஆளுனராக பிரேரிக்கப்பட்ட ஆரம்ப காலத்தில் இருந்தே அதனை எதிர்த்தேன்.

இன்று ஒருசிலர் அவரது செயற்பாடுகளைப்பார்த்துவிட்டுத்தான் தற்போது எதிர்ப்புக் குரல் எழுப்புகின்றனர். ஆனால் அதற்கு முன்னரே நான் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளேன் என்றும் தெரிவித்தார்.

இதன்போது அர்ஜுன் மகேந்திரன் பதவி நீக்கம் செய்யப்படமாட்டார் என்று அமைச்சர் லக்ஷ்மண் கிரியெல்ல தெரிவித்த கூற்று குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பியபோது,

அது அமைச்சர் கிரியெல்லவின் தனிப்பட்ட கருத்து என்றும் , எந்த ஒருவிடயத்திலும் தமது தனிப்பட்ட கருத்தை முன்வைக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார்.