அலி சப்ரி ரஹீம் வாகனம் மீது மோதி ஒருவர் உயிரிழப்பு


அலி சப்ரி ரஹீம் வாகனம் மீது மோதி ஒருவர் உயிரிழப்பு

புத்தளம் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் (Ali sabri raheem) சென்ற மகிழுந்தில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாலாவி – கற்பிட்டி பிரதான வீதியில் நேற்றிரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர் புத்தளம் பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் (Ali sabri raheem) அந்த மகிழுந்தில் பயணித்துள்ளதாக காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், மகிழுந்தை செலுத்திய சாரதி கைது செய்யப்பட்டு நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.