அஷ்வினின் அசத்தலால் நிலை குலைந்தது நியூசிலாந்து

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


அஷ்வினின் அசத்தலால் நிலை குலைந்தது நியூசிலாந்து

இந்தூரில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வினின் அபாரபந்துவீச்சால் நியூசிலாந்து அணி 299 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி கோஹ்லியின் இரட்டை சதம், ரகானேவின் அதிரடி ஆட்டம் என 5 விக்கெட் இழப்பிற்கு 557 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

இதைத் தொடர்ந்து அடுத்து துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்கள் கப்டில்லும், லாதம்மும் சிறப்பான துவக்கத்தை தந்தனர்.

இதனால் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 118 ஓட்டங்கள் குவித்து வலுவான நிலையில் இருந்தது. சிறப்பாக ஆடிய கப்டில் 72 ஓட்டங்களில் ரன் அவுட்டாக நியூசிலாந்து அணி தடுமாறத் தொடங்கியது.

அணியின் மற்றொரு துவக்க ஆட்டக்காரரான லாதம்(53), வில்லியம்ஸ்(8), டெய்லர்(0), ரொன்சி(0), நீசம்(71) ஆகியோரை அஸ்வின் தனது சுழலில் வீழ்த்தினார்.

இதனால் நியூசிலாந்து அணி 299 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.இந்திய அணி தரப்பில் அஸ்வின் 6 விக்கெட்டும், ஜடேஜா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து 258 ஓட்டங்கள் முன்னிலையுடன் ஆடி வரும் இந்திய அணி சற்று முன் வரை விக்கெட் இழப்பின்றி 11 ஓட்டங்கள் எடுத்து விளையாடி வருகிறது.