ஆங்சான் சூகிக்கு மீண்டும் ஜனாதிபதியாக முடியாத நிலை

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


ஆங்சான் சூகிக்கு மீண்டும் ஜனாதிபதியாக முடியாத நிலை

மியான்மர் நாட்டின் தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயக லீக் கூட்டணியின் தலைவி ஆங்சான் சூகி ஜனாதிபதி பதவிக்காக பரிந்துரை செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

அந்தப் பதவிக்காக அதே கட்சியின் வேறு இருவரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. அது Htin Kyaw மற்றும் Henry Van Thio ஆகியோரின் பெயர்களே.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்சான் சூகி தேர்தலில் வெற்றி பெற்றாலும் இராணுவத்தினர் அதிகாரத்தை கையிலெடுத்ததால் அவரால் ஜனாதிபதியாக முடியாமல் போனது.

இராணுவ ஆட்சியின் கீழ் 15 ஆண்டுகள் அரசியல் கைதியாக இருந்த ஆங்சான் சூகி இம்முறையும் ஜனாதிபதியாக முடியாமல் போயிருப்பது அந்நாட்டு அரசியலமைப்பு காரணமாகவே.

சூகியின் இரண்டு மகன்களும் பிரித்தானிய குடியுரிமை பெற்றிருப்பதால், அவரால் அதிபர் பொறுப்பேற்க முடியாத சூழல் தற்போது உள்ளது.
இந்நிலையில், ஆங்சான் சூகி நிச்சயம் அதிபர் ஆக இருக்கமாட்டார் என்று மியான்மர் பாராளுமன்றம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.

இது குறித்து தேசிய ஜனநாயக லீக் கூட்டணி கீழ்சபை உறுப்பினர் கியாவ் திஹா கூறுகையில், “ஆங்சான் சூகி பிரதமர் ஆக முடியாது, ஆனால் அது ஒரு பிரச்சினை இல்லை. அவர் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துவார். எங்களை கட்டுப்படுத்தும் ஒருவர் அவர்தான்” என்று கூறினார்.

இருப்பினும் ஆங்சான் சூகியின் முக்கிய உதவியாளரான ஹ்தின் க்யாவை (Htin Kyaw) ஜனாதிபதி பதவிக்கு பரிந்துரை செய்துள்ளார் சூகி. 69 வயதாகும் ஹ்தின் கியாவ் எழுத்தாளராகவும், முக்கிய ஜனநாயக ஆலோசகராகவும் உள்ளார். இதனை பாராளுமன்றத்தில் இன்று அவரது கட்சி உறுதி செய்துள்ளது.