ஆட்சிப்பீடத்தில் மஹிந்த! நாமலின் குடியுரிமை ரத்து! கண்ணீரில் ஷிரந்தி! ஜோதிடரின் ஆருடம்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


ஆட்சிப்பீடத்தில் மஹிந்த! நாமலின் குடியுரிமை ரத்து! கண்ணீரில் ஷிரந்தி! ஜோதிடரின் ஆருடம்

ராஜபக்ஷ ரெஜிமென்ட் ஜோதிடத்தின் மீது தீவிர நம்பிக்கை கொண்டவர்கள் என்று அனைவரும் அறிந்த ஒரு விடயமே

அந்த வகையில் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக ஆட்சிப்பீடம் ஏறுவார் என முதன் முதலாக இந்தியாவை சேர்ந்த குப்தா என்ற ஜோதிடர் ஆரூடம் கூறியுள்ளார்.

இவர் பிரித்தானியாவின் பிரபல வர்த்தகரான லக்ஷ்மி மிடால் என்பவரின் தினசரி ஜோதிட நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒருவராகும்.

2002 – 2003 ஆண்டு காலப்பகுதியில் இலங்கைக்கு வந்த குப்தா ஏ.எச்.எம்.பௌசியின் வீட்டில் தங்கியிருந்தார். இதன்போது நவ்ஸர் பௌவுஸியுடன் அங்கு வந்த அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த மஹிந்த ராஜபக்சவின் ஜாதகம் குப்தாவினால் பரிசோதிக்கப்பட்டது. அதன்போது ஒரு வருடத்தில் மஹிந்த பிரதமராகவும் இரண்டு வருடத்தில் ஜனாதிபதியாகவும் மாற்றம் அடைவார் என ஆரூடம் கூறியுள்ளார்.

அந்த சந்தர்ப்பத்தில் மிகவும் மகிழ்ச்சியடைந்த நவ்ஸர் பௌசி ” மஹிந்த அண்ணன் ஜனாதிபதியானால் நாங்கள் ஜனாதிபதியானது போன்று தான்” என கூறியுள்ளார். எப்படியிருப்பினும் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகிய 5 வருடங்களுக்கு நவ்ஸர் ஓரங்கட்டப்பட்டார்.

2010ஆம் ஆண்டு தேர்தல் அண்மித்த சந்தர்பப்த்தில் மீண்டும் இலங்கைக்கு வந்த குப்தா, மஹிந்த ராஜபக்ச 60 சதவீதத்திற்கு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் எனவும், சரத் பொன்சேகா தொடர்பில் ஒன்றும் மேற்கொள்ளவில்லை எனவும், அவரது குழியை அவரே வெட்டிக் கொள்வார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

2012 – 2013 காலத்தில் ஜோதிடர் குப்தாவை மீண்டு இலங்கைக்கு அழைத்து வந்த மஹிந்த, அவரிடம் 3 ஜாதக பிரதிகளை சமர்ப்பித்துள்ளார். அதன் முதலாவது ஜாதகத்தின் உரிமையாளரின் தாயாரின் கிரக நிலை மிகவும் பலமாக உள்ள போதிலும் தாயார் உயிருடன் இருக்கும் வரையில் அவரால் அதிகாரத்திற்கு வர முடியாதெனவும், அவ்வாறு வந்தாலும் சிறிது காலங்களுக்கு மாத்திரம் என குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவது குறித்து அந்த சந்தர்ப்பத்தில் கதைத்து பலன் இல்லை என கூறிய ஜோதிடர் 2014ஆம் ஆண்டிற்கு பின்னர் மிகவும் பலமடையும் எனவும், அந்த ஜாதகத்தின் உரிமையாளர் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூன்றாவது ஜாதகத்திற்கு எந்தவிதமான அதிகார வளங்களும் இல்லை என குறிப்பிட்டுள்ளார். இங்கு முதலாவதாக பார்க்கப்பட்ட ஜாதகம் ரணில் விக்ரமசிங்கவின் ஜாதகமாகும். இரண்டாவது ஜாதகம் மைத்திரிபால சிறிசேனவின் ஜாதகம் என தெரியவந்துள்ளது.

2014ஆம் ஆண்டு மீண்டும் குப்தாவை இலங்கைக்கு அழைத்து வந்துள்ள நிலையில் அவரை ஷிரந்தி ராஜபக்ச சந்தித்துள்ளார்.

ஷிரந்தி ராஜபக்சவினால் நாமல் ராஜபக்சவின் ஜாதகம் ஜோதிடர் குப்தாவிடம் வழங்கப்பட்டுள்ளது. அந்த ஜாதகத்தை வாசித்த குப்தா “இது யாருடையது” என வினவியுள்ளார். அதற்கு பதிலளிக்காத ஷிரந்தி கிரகம் சரியில்லையா என கேட்டுள்ளார்.

“நாமல் நாட்டை விட்டு வெளியேறினால் தான் கிரகம் சரியாக இருக்கும் என குப்தா குறிப்பிட்டுள்ளார். இந்த ஜாதகத்திற்கு உரிமையாளர் மிகவும் திறமையான ஒருவராகும். எனினும் சுயமாக அழிந்து போயுள்ளார். 2020 வரையில் இவர் இலங்கையில் இருந்தால் ஒன்று சிறையில் இருப்பார். இல்லை என்றால் குடியுரிமை ரத்து செய்யப்பட்டிருக்கும் என குப்தா குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்சவின் ஜாதகத்தை பரிசோதிப்பதற்கு அவசியமில்லை என கூறிய குப்தா எதிர்வரும் தேர்தலில் நிச்சயமாக அவர் தோல்வியடைவார் என கூறிவிட்டு சென்றுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது