ஆயுத கடத்தலை தடுக்க கூட்டு திட்டம் பிரதமர் வலியுறுத்தல்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


ஆயுத கடத்தலை தடுக்க கூட்டு திட்டம் பிரதமர் வலியுறுத்தல்

ஆயுதம், மனித கடத்தல் மற்றும் போதைப் பொருள் வர்த்தகங்களை கட்டுப்படுத்தும் புதிய வழிமுறையை தயாரிக்க ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தோனேஷியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அவர், அந்த நாட்டின் அரசியல், சட்டம் மற்றும் பாதுகாப்பு அமைச்சரை சந்தித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை ஜகார்த்தா நகரில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது, இலங்கையின் நீதி மற்றும் சமாதானம் தொடர்பிலான அமைச்சு, இந்தோனேஷியாவின் அரசியல், சட்டம் மற்றும் பாதுகாப்பு அமைச்சும் நெருக்கமாக செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்து கருத்துக்கள் பறிமாறப்பட்டுள்ளன.

மேலும், இந்த விடயம் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு இடையில் உயர்மட்டப் பேச்சுவார்த்தை விரைவில் மேற்கொள்ளப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(அத தெரண)