இடைக்கால அரசாங்கம் அமைத்தாலும் நானே பிரதமர் – மஹிந்த ரஜபக்ஷ


இடைக்கால அரசாங்கம் அமைத்தாலும் நானே பிரதமர் – மஹிந்த ரஜபக்ஷ

இடைக்கால அரசாங்கம் ஒன்று உருவாக்கப்படுமாயின் அது தனது பிரதமர் பதவியின் கீழேயே உருவாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பிரதமர் ஊடகப்பிரிவு விடுத்துள்ள குரல் பதிவில், அரசாங்கத்தை பொறுப்பேற்க யாரும் முன்வராத போது, யாரை பிரதமராக நியமிப்பது என கேள்வி எழுப்ப்பட்டுள்ளது.

இடைக்கால அரசாங்கத்திலும் நானே பிரதமர்.

வரலாறு தெரியாத நாடாளுமன்ற உறுப்பினர்களே தம்மை பிரதமர் பதவியில் இருந்து விலக சொல்கின்றனர்.

இதனைவிட நெருக்கடியான சூழ்நிலைகளை இலங்கை சந்தித்திருக்கிறது.

தற்போதைய நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்கும் சக்தி அரசாங்கத்துக்கு இருக்கிறது.

காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த போதும் அவர்கள் வரவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று வௌியிட்ட அறிவிப்பு