இதொகா மற்றும் திமுக உறவு
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிற்கும் தமிழகத்தின் திராவிட முன்னேற்றக்கழகத்துக்கும் இடையில் பல தசாப்தங்களாக வலுவான நட்பு நிலவுகிறது.
இது தொடரும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
தமிழ் நாட்டை சிறப்பாக ஆட்சி செய்து, உலக ரீதியில் போற்றப்படும் தமிழர் நலன்திட்டங்களை மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.
இந்தநிலையில் நெருக்கடியில் இருந்த இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கிய தமிழக மக்களுக்கும் முதல்வருக்கும் இலங்கை மக்கள் சார்பில் செந்தில் தொண்டமான் நன்றியை பகிர்ந்துக்கொண்டார்.
திராவிட முனேற்ற கழகத்தின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் விழா ‘மக்கள் முதல்வரின் மனிதநேயத் திருநாள்’ என்று அண்மையில் கொண்டாடப்பட்ட போதே இந்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில், சிறப்பு விருந்தினர்களாக மலேஷியா நாடாளுமன்ற உறுப்பினர் டடுக் ஸ்ரீ எம்.சரவணன், சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, மொரிஷியஸ் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.