துருக்கி மற்றும் ஜப்பானை போன்று இந்தியாவிலும் நிலநடுக்க பாதிப்பு!

துருக்கி மற்றும் ஜப்பானை போன்று இந்தியாவிலும் நிலநடுக்க பாதிப்பு!

புத்தல பிரதேசத்தில் உணரப்பட்ட நிலநடுக்கத்திற்கு

துருக்கி மற்றும் ஜப்பானை போன்று இந்தியாவிலும் நிலநடுக்க பாதிப்பு!

இந்தியாவின் – குஜராத் மாநிலத்தில் இன்று நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3ஆக பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் மராட்டியம், மேகாலயா மாநிலங்களில் உணர்ப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அடுத்தடுத்து இரு மாநிலங்களில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டமையானது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, துருக்கி – நிக்டே மாகாணத்தில் நேற்றைய தினம் நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.

இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 5.3ஆக பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதம் ஏதும் ஏற்பட்வில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், ஜப்பானின் வடக்குப் பகுதியிலும் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 6.1ஆக பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

துருக்கி மற்றும் ஜப்பானை போன்று இந்தியாவிலும் நிலநடுக்க பாதிப்பு!