இந்திய அணியின் தோல்விக்கான காரணத்தை கூறுகிறார் தோனி

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


இந்திய அணியின் தோல்விக்கான காரணத்தை கூறுகிறார் தோனி

நாணயசுழற்சியை வெற்றி பெறாமல் போனது மோசமாக அமைந்து விட்டதாக இந்திய அணியின் தலைவர் தோனி தெரிவித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணியுடன் நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

192 குவித்தும் இந்திய அணிக்கு சிறப்பான பந்து வீச்சு அமையாததால் வெற்றி வாய்ப்பு கிட்டாமல் போனது. போட்டிக்கு பின்னர் தோனி பேசியதாவது:-

எனக்கு தெரியும் நாணயசுழற்சியை தோற்றது மோசமான விஷயம். இரண்டாவது இன்னிங்சில் பனிப் பொழிய ஆரம்பித்துவிட்டது. எங்களது முதல் சில ஓவர்கள் மோசமாக இல்லை. ஆனால் எங்களுடைய சுழற்பந்து வீச்சாளர்கள் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை. பனிப் பொழிவு நேரங்களில் சிறப்பாக செயல்பட்டதாக எங்களது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு வரலாறு இல்லை.

உலகக் கிண்ண தொடரில் நாங்கள் வெளியேற்றப்பட்டுள்ளோம். ஏனெனில் ஈரமான பந்தில் சிறப்பாக பந்துவீசவில்லை. அதுமட்டுமில்லாமல், இரண்டு நோ பால்ககளால். பந்துவீச்சாளர்களால் நான் அதிகம் ஏமாற்றமடையவில்லை. வேகப்பந்து வீச்சாளர்கள் ஆட்டத்தை கையிலெடுத்து மாற்றிவிடுவார்கள் என்று விரும்பினேன்.

எங்களுக்கு நிலைமை மோசமாக இருந்தது. இது ஒரு கடினமான வடிவம். வழக்கமாக போட்டிகள் கொஞ்சம் நெருக்கடியில் முடிபவை தான். ஒரு சில போட்டிகள் தான் எதிரணியின் தன்மையால் எளிதில் முடிந்துவிடும். வழக்கமாக கடைசி ஓவர் வரை போட்டி செல்லும். ஆனால், பயன்படுத்தி இருக்க வேண்டும். ஐ.பி.எல் போட்டிகளில் இது போன்று பல போட்டிகளை நாங்கள் சந்தித்திருக்கிறோம். இவ்வாறு தோனி பேசினார்.