இந்திய கிரிக்கெட் அணி நீல ஜெர்சி அணிவதற்கான முக்கிய காரணம் தெரியுமா?

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


இந்திய கிரிக்கெட் அணி நீல ஜெர்சி அணிவதற்கான முக்கிய காரணம் தெரியுமா?

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் ஒவ்வொரு அணியும் பிரத்தியேக நிற ஜெர்சி அணிந்து விளையாட தொடங்கிய நாள் முதல் இந்திய கிரிக்கெட் அணி நீல ஜெர்சியே அணிந்து விளையாடி வருகின்றது.

என்ன தான் ஸ்பான்சர்ஷிப் மாறினாலும், அணி வீரர்கள் மாறினாலும் ஜெர்சியின் நீறம் நீலமாகவே இருக்கறிது. நீல நிறம் மாறாததற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது.

ஒருநாள் போட்டிகளுக்கு வரவேற்புக் கிடைத்தையடுத்து டெஸ்ட் போட்டிகளில் இருந்து மாறுபட்டு இருக்க ஒருநாள் போட்டிகளுக்கென ஒவ்வொரு நாட்டுக்கும் பிரத்யேக ஜெர்சிக்கள் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டது.

இதற்கான ஆலோசனையில் இந்திய தேசியக் கொடியில் உள்ள நிறத்தின் அடிப்படையில் இந்திய அணியின் ஜெர்சியை வடிவமைக்க முடிவு செய்யப்பட்டது.

தேசியக் கொடியில் உள்ள பச்சை நிறத்தை பாகிஸ்தான் அணி ஏற்கனவே தேர்வு செய்ததாலும், காவி நிறத்துக்கு அரசியல் சாயம் பூசப்பட்டு விட்டதாலும், தேசியக் கொடியில் உள்ள அசோகச் சக்கரத்தின் நிறமான நீல நிறத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனாலே, இந்திய வீரர்கள் தொடர்ந்து நீல நிற ஜெர்சி அணிந்து விளையாடி வருகின்றனர்.