இந்திய செயற்கை கோளின் உதிரிப்பாகங்கள் திருகோணமலை கடற்பிராந்தியத்தில் உடைந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர் ஒருவர் கடற்றொழில் திணைக்களத்திற்கு வழங்கிய தகவலுக்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு மையம் இன்று போலார் (Polar) என்ற செயற்கை கோளை விண்ணில் ஏவியது.
அதன் உடைந்த பாகங்கள் இலங்கை கடற்பிராந்தியத்தில் தரையிறங்கலாம் என இந்தியh இலங்கை கடற்படைக்கு ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்திய செயற்கை கோளின் உடைந்த பாகங்கள் சில திருகோணமலைக்கு அப்பால் உள்ள கடற்பிராந்தியத்தில் வீழ்ந்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.