இந்திய ரிசர்வ் வங்கிக்கும் இலங்கை மத்திய வங்கிக்கும் இடையில் விஷேட நிதி பரிமாற்ற ஒப்பந்தம்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


இந்திய ரிசர்வ் வங்கிக்கும் இலங்கை மத்திய வங்கிக்கும் இடையில் விஷேட நிதி பரிமாற்ற ஒப்பந்தம்

இந்தியாவின் ரிசர்வ் வங்கி மற்றும் இலங்கை மத்தி வங்கி ஆகியன விஷேட பணமாற்று ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளன.

இந்த ஒப்பந்தத்தின் படி மூன்று மாத காலத்திற்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை இந்திய ரிசர்வ் வங்கியினூடாக இலங்கை மத்திய வங்கிக்கு பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த ஒப்பந்தம் தற்போது சார்க் வலய நாடுகளுக்கிடையில் இருக்கும் நிதி பரிமாற்ற ஒப்பந்தத்திற்கு மேலதிகமாக செயற்படவுள்ளது.

குறித்த உடன்படிக்கையானது, 2016ம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய மத்திய அரசிடம் பெற்றுக் கொண்ட விஷேட அனுமதியின் கீழ் ஒப்பந்தமாகியுள்ளதுடன் இந்தியா மற்றும் இலங்கைக்கிடையில் நீண்ட காலமாக காணப்படுகின்ற பொருளாதார உறவு காரணமாக இந்த மேலதிக பணமாற்று சலுகை பெறப்பட்டுள்ளது.