இந்திய வர்த்தகத்துறை அமைச்சரின் இலங்கை விஜயம் ரத்துக்கான காரணம் இதுவே

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


இந்திய வர்த்தகத்துறை அமைச்சரின் இலங்கை விஜயம் ரத்துக்கான காரணம் இதுவே

இலங்கைக்கு வரவிருந்த இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சித்தாராமன் தமது பயணத்தை ரத்துச் செய்துள்ளார்

புதுடில்லியில் அதிக வேலைப்பளுவை காரணம் காட்டியே இந்த பயணம் ரத்துச்செய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் வெளிநாட்டு வர்த்தகத்துறை அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவின் அழைப்பை ஏற்று நிர்மலா கடந்த 25ஆம் திகதியன்று இலங்கைக்கு வரவிருந்தார்.

எனினும் அமரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் இடம்பெறவிருக்கின்ற அமரிக்க ராஜாங்க செயலர் ஜோன் கெரி பங்கேற்கவுள்ள கலந்துரையாடலுக்கான ஆயத்தங்களுக்காகவே நிர்மலாவின் பயணம் ரத்துச்செய்யப்பட்டதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கு வரவிருந்த இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா, இலங்கையின் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சுவார்த்தைகளை நடாத்த திட்டமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.