இந்தோனேஷியாவுக்கு புறப்பட்டார் பிரதமர்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


இந்தோனேஷியாவுக்கு புறப்பட்டார் பிரதமர்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, யூ.எல். 308 என்ற விமானத்தில் இந்தோனேஷியாவுக்கு சென்றுள்ளனர்.

இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவுடன் இந்த விஜயத்தில் 12 பேர் அடங்கிய குழுவும் இணைந்து கொண்டுள்ளதாக, பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

ஜகார்த்தா நகரில் இடம்பெறும் 12வது உலக இஸ்லாம் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ளவே அவர் அங்கு சென்றுள்ளார்.

எதிர்வரும் 2ம் திகதி முதல் 4ம் திகதி வரை இந்த நிகழ்வு நடைபெறவுள்ளதோடு, உலக இஸ்லாம் பொருளாதார மாநாட்டுக்காக இலங்கை முதல் முறையாக அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 100 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 2500 பேர் இந்த மாநாட்டுக்காக வருகைதரவுள்ளனர்.

அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதன்போது விஷேட உரையொன்றையும் ஆற்றவுள்ளதாக, பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

(அத தெரண)