இந்த ஆண்டு இறுதியில் ETCA உடன்படிக்கை ஒப்ப மிடப்படும்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


இந்த ஆண்டு இறுதியில் ETCA உடன்படிக்கை ஒப்ப மிடப்படும்

இவ்வாண்டு இறுதிப் பகுதியில் பொருளாதார, தொழில்நுட்ப கூட்டு ஒப்பந்தத்தில் (ETCA) கைச்சாத்திட எதிர்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் கைச்சாத்திடப்படவுள்ள இந்த ஒப்பந்தம் இரு நாட்டு உறவுகளையும் வலுப்படுத்தும் என நம்புவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தை இவ்வாண்டு இறுதிக்குள் ஏற்படுத்திக்கொள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் தாமும் தீர்மானித்துள்ளதாக, இந்தியாவில் இடம்பெறும் பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்டு ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளும் இணைந்து செயற்பட்டால் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து, உப பிராந்திய பொருளாதாரத்தை 500 பில்லியன் டொலர்களாக உயர்த்தும் தகைமை பொருளாதார, தொழில்நுட்ப கூட்டு ஒப்பந்தத்திற்கு உள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.