இந்த வார மின்வெட்டு தொடர்பில் வௌியான முக்கிய அறிவிப்பு


இந்த வார மின்வெட்டு தொடர்பில் வௌியான முக்கிய அறிவிப்பு

ஏப்ரல் 13, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஏப்ரல் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணித்தியாலங்கள் 15 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Daily News Tamil in Sri Lanka – இலங்கையின் இன்றைய செய்தி