இனப்பிரச்சினைக்கான தீர்வை குழப்ப மஹிந்த முயற்சி! இரா.சம்பந்தன் குற்றச்சாட்டு

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


இனப்பிரச்சினைக்கான தீர்வை குழப்ப மஹிந்த முயற்சி! இரா.சம்பந்தன் குற்றச்சாட்டு

புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் தற்போதைய அரசு செயற்பட்டு வரும் வருகிறது. அதனை குழப்ப முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாதயாத்திரையினை மேற்கொண்டு வருவதாகவும், தமிழ் மக்கள் நிதானமாக செயற்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

மன்னாரில் நேற்று இடம்பெற்ற ‘தடம் மாறுகிறதா தமிழ் தேசியம்’ என்னும் தலைப்பில் இடம்பெற்ற கருத்துப்பகிர்வு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

-அவர் மேலும் உரையாற்றுகையில்,,,

புதிய அரசியல் சாசனத்தை நிறைவேற்றுவது, தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் தற்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.

எனினும் இராணுவம், அரச அதிகாரிகள் மற்றும் நல்லாட்சி அரசாங்கத்திற்குள் அங்கம் வகிக்கும் சில அரசியல்வாதிகள் ஆகியோர் மஹிந்த ராஜபக்சவிற்கே விசுவாசமாக இருக்கின்றனர்.

ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதிலும், அரசியல் கைதிகள் விடுதலை உட்பட சில பிரச்சனைகள் தீர்ப்பதில் தாமதம் இருப்பதாகவும் தெரிவித்த சம்பந்தன் தமிழ் மக்கள் நிதானமாகவும், பொறுப்போடும் செயற்பட வேண்டும் என மேலும் தெரிவித்தார்.