இனவாதத்தை தவிர்க்க வேண்டும்: சம்பிக்க ரணவக்க

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


இனவாதத்தை தவிர்க்க வேண்டும்: சம்பிக்க ரணவக்க

இனவாதத்தை தவிர்த்துக் கொள்ள வேண்டுமென அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

சிலாபத்தில் நேற்று நடைபெற்ற கட்சி உறுப்பினர் கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை மையப்படுத்தி உருவாக்கப்படும் பாசிசவாதம் இனவாதம் உடனடியாக களையப்பட வேண்டும்.

அன்று அமிர்தலிங்கத்திற்கு யோகேஸ்வரனுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தி பீதியை உருவாக்க அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இன்றும் அவ்வாறான நிழல்கள் உருவாகியுள்ளன. சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் இதற்கு பொறுப்பு சொல்ல வேண்டும்.

பல்கலைக்கழக மாணவர்கள் நாட்டு மக்களின் வரிப் பணத்தில் கல்வி கற்கின்றனர்.

அவர்கள் இதற்கான குறைந்தபட்ச நன்றியையேனும் தெரிவிக்க வேண்டும்.

இந்த நாட்டில் 17 பல்கலைக்கழங்கள் காணப்படுகின்றன. 33 உயர்கல்வி நிறுவனங்கள் காணப்படுகின்றன.

இவற்றில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இதில் 12000 பேர் தமிழ் மாணவர்களாவர்.

வடக்கு மாணவர்களுக்கு இலங்கையின் எந்தவொரு இடத்திலும் அவர்களது இனத்திற்கு மதத்திற்கு கலாச்சத்திற்கு உயர் பாதுகாப்பினை ஏனைய இனத்தவர்கள் வழங்குகின்றார்கள்.

இதேபோன்று சிங்கள முஸ்லிம் மாணவர்கள் யாழ்ப்பாணத்தில் கல்வி கற்கவும் வாழ்வதற்கும் உரிமையுண்டு.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்ளை சிரேஸ்ட மாணவர்கள் வரவேற்பதற்கு நிகழ்வு ஏற்பாடு செய்ததனை நாம் வரவேற்க வேண்டும்.

எனினும் சிங்கள கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் நடனமொன்றை அங்கு நடத்தமுடியாவிட்டால் அந்த இடத்திலேயே சட்டத்தை அமுல்படுத்த வேண்டும்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக தமிழ் மாணவர்களுக்கு என்று தனியான சட்டம் கிடையாது.

இந்த நிலைமை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நந்திக்கடலில் முடிவுகண்ட பிரபாகரன்கள் மீளவும் உருவாக இடமளிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.