இனிவரும் பரீட்சைகளில் மேற்பார்வையாளர்களாக அதிபர்கள் நியமனம்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


இனிவரும் பரீட்சைகளில் மேற்பார்வையாளர்களாக அதிபர்கள் நியமனம்

இம்முறை நடைபெற்ற உயர்தரம், 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் போதுமாணவர்களை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கிய பரீட்சை மேற்பார்வையாளர்களுக்குஎதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்தெரிவித்துள்ளார்.

எனினும் கடந்த கலங்களை விட இம்முறை அதிகாரிகள் தொடர்பில் குறைந்தளவுமுறைபாடுகளே கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த வருடம் நடைபெறும் அனைத்து பரீட்சைகளுக்கும் பரீட்சை மத்தியநிலையங்களின் மேற்பார்வையாளர்களாக புதிதாக இணைக்கப்பட்டுள்ள அதிபர்களுக்குவாய்ப்பளிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பரீட்சை மண்டபங்களில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் அதிகாரிகள்மீது குற்றம் சுமத்திவிட்டு கல்வி அமைச்சர் உள்ளிட்டவர்கள் அமைதியாக இருப்பதாகஇலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளமைகுறிப்பிடத்தக்கது.