இனி அனைத்து வீடுகளுக்கும் இலவசமாக மின்சாரம்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


இனி அனைத்து வீடுகளுக்கும் இலவசமாக மின்சாரம்

அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரத்தை கட்டணமில்லாமல் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குவதன் மூலம், சுமார் 80 லட்சம் பேர் பயனடைவார்கள் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு 100 யூனிட் வரை இலவசமாக அளிக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தது.

ஆட்சி அமைந்ததும் அந்த வாக்குறுதியை தனது முதல் உத்தரவிலேயே நிறைவேற்றியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

அதன்படி மே 23ம் திகதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது.

உதாரணத்திற்கு 120 யுனிட் மின்சாரம் பயன்படுத்தியிருப்பின், அதில் 100 யுனிட்டுகள் கழிக்கப்பட்டு மீதமிருக்கும் 20 யுனிட்டுக்கு மட்டும் கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும்.