இன்று அதிகாலை நடந்த கோர தீ விபத்து சம்பவம் – ஒரே குடும்பத்தின் மூவர் பலி


இன்று அதிகாலை நடந்த கோர தீ விபத்து சம்பவம் – ஒரே குடும்பத்தின் மூவர் பலி

மெனிக்கும்புர – கட்டுகஸ்தொட்ட பிரதேசத்தில் வீடு ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக மூவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த தீ விபத்து இன்று (24) அதிகாலை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதில், தந்தை, மகள் மற்றும் மருமகன் உயிரிழந்ததுடன், தாய் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் சம்பவத்தில் 4 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் விரைந்துள்ளதுடன், பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Sri lanka tamil news today