இன்று மாலை ஜனாதிபதி நடத்தவுள்ள விஷேட கூட்டம்


இன்று மாலை ஜனாதிபதி நடத்தவுள்ள விஷேட கூட்டம்

காபந்து அரசாங்கத்திற்கான முன்மொழிவு தொடர்பில் கலந்துரையாட அரசாங்கத்தில் இருந்து விலகிய 41 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

அதற்கமைய இன்று மாலை 7 மணிக்கு குறித்த கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஆளும் கூட்டணியின் பங்காளி கட்சிகள் காபந்து அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பில் முன்னராக கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.