இன்று முதல் தொலைபேசி கட்டணம் அதிகரிப்பு


இன்று முதல் தொலைபேசி கட்டணம் அதிகரிப்பு

சர்வதேச தொலைபேசி அழைப்பு கட்டணம் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமொன்று சர்வதேச அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி கட்டணங்களை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

அமெரிக்க டொலாருக்கான ரூபாய் மதிப்பு சரிந்ததன் விளைவாக இந்த கட்டண அதிகரிப்பு இடம்பெறவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

எனினும் தேசிய தொலைபேசி அழைப்பு கட்டணம் மற்றும் இணையத்தள கட்டணங்களை அதிகரிக்க இதுவரை அனுமதி வழங்கவில்லை என தொழிற்நுட்ப அமைச்சு கூறியுள்ளது.