இன்று முதல் விஷேட பஸ் சேவைகள் ஆரம்பம்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


இன்று முதல் விஷேட பஸ் சேவைகள் ஆரம்பம்

சித்திரைப் புத்தாண்டிற்காக சொந்த ஊர்களுக்கு சென்றிருந்த மக்கள் மீண்டும் தமது பணிகளுக்கு திரும்புவதற்காக விஷேட பஸ் சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்காக இன்று முதல் விஷேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக அதன் தலைவர் எம்.ஏ.பி.ஹேமசந்திர தெரிவித்தார்.

அதன்படி அதிவேக வீதிகள் உள்ளிட்ட அனைத்து வீதிகளிலும் வழமையான நேர அட்டவணைக்கு மேலதிகமாக பஸ்கள் இணைத்துக் கொள்ளப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

பயணிகளின் தேவைகளுக்கு ஏற்ற விதமாக பஸ்களை சேவையில் ஈடுபடுத்துமாறு அனைத்து மாகாண போக்குவரத்து அதிகாரிகளுக்கும் அறிவித்தல் விடுத்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.