இமதுவ பிரதேச சபை தவிசாளர் உயிரிழப்பு


இமதுவ பிரதேச சபை தவிசாளர் உயிரிழப்பு

இமதுவ பிரதேச சபை தவிசாளர் டீ.வி. சரத்குமார மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

குழுவொன்றினால் நேற்றிரவு அவரது வீடு தாக்கப்பட்டமையை அடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாநகர சபை உறுப்பினர் சுரங்க ராஜபக்ஷவிற்கு சொந்தமான வர்த்தக நிலையம் ஒன்று தீவைக்கப்பட்டுள்ளது.

ஸ்பிரிங்வெளி – ரொக்கில் சந்தியில் அமைந்துள்ள குறித்த வர்த்தக நிலையம் ஒன்றே பொதுமக்களால் இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.