இம்ரான் கானை கைதுசெய்ய
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைதுசெய்வதற்காக, அந்த நாட்டு பொலிஸார், லாஹுரில் உள்ள அவரது இல்லத்திற்கு செல்ல முயற்சித்த போது, குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இம்ரான் கானை கைதுசெய்து எதிர்வரும் 18ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மாவட்ட நீதிமன்றம் ஒன்று இன்று பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, இம்ரான் கானை கைதுசெய்வதற்கு பொலிஸார் லாஹுரில் உள்ள அவரின் இல்லத்திற்கு செல்ல முயற்சித்த போது, இம்ரான் கானின் கட்சி ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, அவர்களைக் கலைப்பதற்காக, பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் 20ம் திகதி இடம்பெற்ற பேரணியில் பொலிஸ் அதிகாரிகளை அச்சுறுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு விசாரணைகளில் இம்ரான் கான் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை.
இந்த நிலையில், இம்ரான் கானை கைதுசெய்து எதிர்வரும் 18ம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இம்ரான் கானை கைதுசெய்ய
மலையகத்தில் படித்தவர்கள் அரசியலுக்கு வருவதில்லை என்பது பொய் – வருபவர்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள்!