தனக்கு எதிராக எதிர்க்கட்சிகளினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையில் தோல்வியடைந்த இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமர் பதவியை இழந்துள்ளார்.
நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்ட முதல் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நேற்று இரவு நடைபெற்றது.
342 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றில், தீர்மானத்திந்கு ஆதரவாக 174 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
இந்த நிலையில், இம்ரான் கான் தொடர்பில் அதிர்ப்தியில் செயற்பட்ட ஆளும்தரப்பு உறுப்பினர்கள் சிலர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
இதன் அடிப்படையில், புதிய பிரதமர் விரைவில் நியமிக்கப்படுவார் என அறிவிக்கபட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் திங்கட் கிழமை அதற்கான வாக்கெடுப்பு இடம்பெறுமெனவும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
அவ்வாறு தெரிவுசெய்யப்படும் புதிய பிரதமர் 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் வரையில், அதிகாரத்தில் இருப்பார் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.
அத்துடன், பாகிஸ்தான் நாடாளுமன்ற சபாநாயகர் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.