இரண்டாவது போட்டியிலும் இலங்கை வெற்றி

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


இரண்டாவது போட்டியிலும் இலங்கை வெற்றி

அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 136 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அயர்லாந்து முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்ட இழப்பிற்கு 377 ஓட்டங்களைக் குவித்தது.

இலங்கை அணி சார்பில் அபாரமாக ஆடிய குஷல் ஜனித் பெரேரா 135 ஓட்டங்களையும், சீக்குகே பிரசண்ண 95 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் அயர்லாந்து சார்பில் முர்தக் 66 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 45 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 241 ஓட்டங்களைப் பெற்றது.

சுரங்க லக்மால் 38 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

அத தெரண தமிழ்